யாழில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வசமாக சிக்கிய இளைஞர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழ். கொட்டடிப் பகுதியில் இளைஞர் ஒருவர் போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளர்.

யாழ். குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் வசமாக சிக்கியுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் 17.569 கிலோகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.