மோட்டார் வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்! சனிக்கிழமைகளிலும் வரும் வசதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

சனிக்கிழமைகளிலும் சேவைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினை சனிக்கிழமைகளிலும் சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்துறை தொடர்பாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி அனுமதி பத்திரத்தை விநியோகித்தல், புதுப்பித்தல், சாரதி அனுமதி பத்திரத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை சனிக்கிழமைகளிலும் சாரதிகளால் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மோட்டார் வாகன திணைக்களத்தின் வெரஹெர அலுவலகத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் நுகேகொட அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுப்படுத்தப்படு என குறிப்பிடப்பட்டுள்ளது.