வீதியின் குறுக்கே தொங்கும் மின்சார கம்பிகளால் போக்குவரத்து தடை

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியில் மின்சார கம்பிகள் வீதியின் குறுக்காக தொங்குவதால் இன்று போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாங்குளம் மற்றும் கொக்குளாய் ஆகிய இரு பிரதான வீதிகளையும் ஒன்றிணைத்து முல்லைத்தீவு நகர்பகுதிக்கு செல்லும் நீதிமன்ற வாளக சந்தியிலேயே இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வாகனங்களை அங்கிருந்து அனுப்பியிருந்தனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.