கொழும்பு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்! பயணிகள் தவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி நோக்கி செல்வதற்கு முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுடனான பெட்டி இணைக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் பாரிய சிக்கல் நிலைமைக்கு பயணிகள் முகம் கொடுத்துள்ளனர்.

ப்ளு நைன் என அழைக்கப்படும் அதி சொகுசு ரயில் பெட்டிக்கு முன்பதிவின் மூலம் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று பயணித்த ரயிலில் அந்த பெட்டி இணைக்கப்படாமையினால் ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ளனர்.

தங்களுக்கு நடந்த அநீதி தொடர்பில் தாம் முறைப்பாடு செய்யவுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.