திருகோணமலையை பாரிய நகராக்க திட்டத்திற்கு இட்டு செல்ல பல்வேறு திட்டங்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலையை பாரிய நகராக்க திட்டத்திற்கு இட்டு செல்ல பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

திருகோணமலையை பாரிய நகராக்க திட்டத்துக்கு இட்டு செல்வதற்கு பல்வேறு திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து திருகோணமலை துறைமுகமும் பாரிய அபிவிருத்தி இலக்கை அடையவுள்ளது.

இதனால் அழகு மிக்க நகரமாக மாற்றமடையவுள்ளதுடன், இளைஞர்களுக்கான அதிகளவான வாய்ப்புக்களும் கிட்டவுள்ளன.

சிங்கப்பூர் நாட்டின் நிதி உதவியூடாக லகூன் சிட்டி என்ற திட்டம் ஊடாக நகரமயமாக்கமும், அபிவிருத்தியும் அடையவுள்ளது.

கொழும்பு - திருகோணமலைக்கான உயர் பாதை ஒன்றை அமைக்க எதிர்கால முன்மொழிவுகளில் உள்ளது. இதனை பொறுப்பு வாய்ந்த அமைச்சர் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியுள்ளார்.