சிறைச்சாலையில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள வேலை

Report Print Steephen Steephen in சமூகம்

ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலை வைத்தியசாலையில் பதிவாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

அவர் சிறுநீரக கோளாறு காரணமாக அண்மைய நாட்கள் வரை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சுகமடைந்த பின்னர், மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு வழக்கப்பட்ட வேலையை செய்ய அவர் மறுத்துள்ளார்.

இதனையடுத்தே வைத்தியசாலையில் அவர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் அணியும் சாதாரண உடையான ஜம்பரும் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.