ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸிதிஸி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடக அமைச்சினால் வருடாந்தம் ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் இம்முறை புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.

இதில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.