தீப்பரவலால் முற்றாக பாதிக்கப்பட்ட விற்பனை நிலையம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

அயகம - கமிக்கந்த பகுதியிலுள்ள விற்பனை நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அயகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடபெற்றுள்ளது.

இதன்போது அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் குறித்த விற்பனை நிலையம் முற்றாக பாதிப்படைந்துள்ளது.

எனினும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட நிலையத்திற்கருகில் இருந்த கெப் வண்டியும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.