சேறுவில தொகுதிக்கு அபிவிருத்தி பணிகளுக்காக நூறு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்க திட்டம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் சேறுவில தொகுதி அபிவிருத்தி பணிகளுக்காக நூறு மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

மொறவெவ பிரதேசசபை தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று இன்று மொறவெவ பிரதேசசபையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போதே பிரதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மொறவெவ பிரதேசத்தில் செமட்ட செவண திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய மாதிரி கிராமங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சேறுவில தொகுதி அபிவிருத்திக்கு 23 மில்லியன் ரூபாய் நிதியினை கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கியுள்ளதாகவும் எதிர்காலத்தில் மிகுதி 78 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது மொறவெவ பிரதேச செயலாளர் பாத்திய விஜயந்த, மொறவெவ பிரதேசசபை தலைவர் பௌத்த மதகுரு பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமி மற்றும் சபை செயலாளர் ஜூட்ராஜசிங்கம் மொறவெவ பிரசே சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.பைசர் .எப்.எம்.அஸ்மிர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.