மகாகந்துர மதுஷ் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு

Report Print Kamel Kamel in சமூகம்

பிரபல பாதாள உலகக் குழு தலைவர் மகாகந்துர மதுஷ் என்பவரின் சார்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாதாள உலகக் குழு தலைவரின் சிறிய தாயினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டுபாயில் தற்பொழுது மது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை போலீசார் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, திட்டமிட்ட குற்றச் செயல்கள் பிரிவு பொறுப்பதிகாரி, போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.