யார் என்பது முக்கியமல்ல ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் வழக்கு தொடரலாம்: நீதியமைச்சர்

Report Print Steephen Steephen in சமூகம்

ஊழல், மோசடி, வீண் விரயம் சம்பந்தமாக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மட்டுமல்லாது எவருக்கும் எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையாக நிதி தொடர்பாக குற்றங்களை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய மூன்று விசேட மேல் நீதிமன்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. தற்போது இரண்டு நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.

எந்த ஊழலாக இருந்தாலும் அரசாங்கத்திற்கு அது தொடர்பான நம்பிக்கையில்லை. அந்த ஊழல் பற்றிய விசாரணைகளை நடத்த வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் விசாரணைகளை நடத்துவதும் நீதிமன்றங்கள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றின் பொறுப்பு.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக முன்னாள் ஆளுநரை மட்டுமல்ல, மிக் விமான கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தேடப்படும் நபரான உதயங்க வீரதுங்கவையும் நாட்டுக்கு கொண்டு வரும் தேவை இருக்கின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.