திருகோணமலையில் இளைஞன் செய்த வேலை! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 400 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

மகாமாயபுர, திருகோணமலை, பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருகோணமலை நகரிலிருந்து மகாமாயபுர பகுதிக்கு முச்சக்கர வண்டியில் 400 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருளை கொண்டு சென்ற போதே திருகோணமலை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேக நபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Latest Offers