கர்ப்பிணித் தாய்மாருக்கான 'ரசனை' வேலைத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Report Print Rusath in சமூகம்

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ' தொளஸ்மகேபான' வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மாருக்கான 'ரசனை' வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 100 கர்ப்பிணித் தாய்மார் பங்கு பற்றியுள்ளனர்.

மேலும் தாய், சேய் நல ஆரோக்கிய வாழ்வுக்கான உணவுப் பழக்க வழக்கங்கள், வருமுன் காப்போம், நோய் தவிர்ப்பு முறைமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் மஞ்சந்தொடுவாய் யூனானி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜலால்தீன், வைத்திய அதிகாரி என். சுமங்களா, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.எம். நசீர்தீன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.