14 சீனர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்

சுற்றுலா விசாவில் வந்து இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 15 சீனப் பிரஜைகளுக்கு காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல இன்று தலா ஓராண்டு சிறைத்தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சந்தேக நபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்த சீனப் பிரஜைகள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, காலி தடல்ல பிரதேசத்தில் கட்ட நிர்மாண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தம போது கடந்த 2 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை செலுத்த தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.