இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த மீனவர்களுக்கு விளக்கமறியல்

Report Print Kanmani in சமூகம்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்துறை நீதிவான் அ. ஜூட்சன் முன்னிலையில் இன்று சந்தேகநபர்களை ஆஜர்ப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 13ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகு விபத்துக்குள்ளான நிலையில் இராமேஸ்வரத்தை சேர்ந்த எட்டு மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஷாம் டேனியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் துரைபாண்டி ஆகிய இருவரினதும் கல்வியை கருத்திற் கொண்டு, அவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த படகு விபத்தில் இரமேஸ்வரத்தை சேர்ந்த முனுசாமி எனும் மீனவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.