சஷி வீரவன்சவிற்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கொழும்பு நீதிமன்ற நீதிவான் லங்கா ஜெயரட்ன இந்த விசாரணையை ஒத்திவைத்துள்ளார். போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டே சஷி மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று சாட்சியாளராக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா மன்றில் ஆஜராகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.