வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Kamel Kamel in சமூகம்

உரிய வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த 14 சீனப் பிரஜைகளுக்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பதினான்கு சீனப் பிரஜைகளும் அண்மையில் காலியில் வைத்து அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் நேற்று காலி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது வீசா இன்றி தங்கியிருந்த குற்றச்சாட்டுக்காக தலா ஓராண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர்களுக்கு தலா 50000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீனப் பிரஜைகள் காலியில் ஓர் கட்டட நிர்மாண நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், உரிய வீசா இவர்களிடம் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

Latest Offers