வவுனியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரிடமிருந்த பொருள்

Report Print Theesan in சமூகம்

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி, சதொச விற்பனை நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 22 மற்றும் 50 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் அருகிலுள்ள சிறைச்சாலைக்குள் இந்த போதைப்பொருளினை வீசுவதற்கு திட்டமிட்டிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளின் பின் இன்று சந்தேகநபர்களை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளரன்.