கொழும்பு மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு நகரத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் வகையில் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

0112- 676161 என்ற இலக்கம் ஊடாக மக்கள் தகவல் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7.30 மணியில் இருந்து இரவு 9.00 மணி வரை இந்த இலக்கம் இயங்கும் என கொழும்பு நகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி ருவண் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

மக்கள் வழங்கும் தகவல்களுக்கமைய அரை மணி நேரத்திற்குள் அதிகாரிகளை ஈடுபடுத்தி அந்த இடங்கள் சுற்றிவளைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.