மஹிந்தவிற்கு மிகவும் நெருக்கமான இளம் அரசியல்வாதி மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசியல் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பிரதேச சபை உறுப்பினரான 45 வயதான நுவன் சன்ஜீவ மென்டிஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி இரவு 9 மணியளவில் மாதம்பே - குளியாப்பிட்டிய வீதியின் சுதுவெல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன் போது முன்னால் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers