சாரதிகளுக்கு ஓர் எச்சரிக்கை! கொண்டு வரப்படவுள்ள புதிய சட்ட நடவடிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்கள் தொடர்பில் புதிய சட்ட நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்தவகையில் பல்வேறு ஓசைகளை எழுப்பிய வண்ணமும், வர்ண மின்குமிழ்களை ஒளிர விட்ட வண்ணமும் செல்லும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த தகவலை வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஓசைகள் எழுப்பும் கருவிகள் மற்றும் வர்ண மின்குமிழ்களை சில வாகன சாரதிகள் வாகனங்களில் பொருத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கையானது பெரும்பாலான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே குறித்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய சட்ட நடவடிக்கையாது நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.