கிளிநொச்சி - கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் பிரம்பு வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை பாரம்பரிய முறைப்படி மீசாலை புத்தூரிலிருந்து மடைப்பண்டம் எடுத்து வருவதற்காக நேற்ற மாலை மாட்டு வண்டிகளில் ஆலயத்தொண்டர்கள் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.