மங்கள வைபவத்திற்காக சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Steephen Steephen in சமூகம்
130Shares

கொழும்பு - குருணாகல் பிரதான வீதியின் பொல்காவெல, மெத்தலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியும் கடற்படையினர் பயணித்த வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இரு பெண்களும், ஒரு ஆணுமே சம்பவத்தில் உயிரழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அலவ்வ பிரதேசத்தில் நடைபெறும் மங்கள வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.