சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை பெண்களின் மோசமான செயல்

Report Print Steephen Steephen in சமூகம்
642Shares

தங்க கடத்தலில் ஈடுபட்ட இரண்டு இலங்கை பெண்கள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்திச் சென்ற இந்த பெண்கள் பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பெண்களிடம் இருந்து 900 கிராமுக்கும் மேற்பட்ட தங்கக்கட்டிகள், சங்கிலிகள், வளையல்கள் என்பவற்றை இந்திய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த தங்கத்தின் மதிப்பு 30 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை பெண்கள் சம்பந்தமாக இந்திய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.