கொழும்பில் தனக்கு தானே தீ வைத்துகொண்ட நபர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

கொழும்பு - பிட்டகோட்டை பகுதியில் நபரொருவர் தனக்கு தானே தீ வைத்து கொழுத்தி கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று, அந்த பகுதியில் உள்ள தேசிய சேவையாளர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தீ வைத்துகொண்டவர் 62 வயதுடைய நபர் ஒருவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers