யாழில் நல் உள்ளம் கொண்டவர்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ள தாயார்

Report Print Sumi in சமூகம்

தமது உறவுகளை பறிகொடுத்து வறுமையில் வாடும் தமக்கு உதவுவதற்கு யாரேனும் முன்வரவேண்டும் என யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர் ஒருவரின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனின் ஏற்பட்டில் இன்றைய தினம் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 25 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தாயொருவரே மேற்கண்டவாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டில் எனது உறவுகளை பறிகொடுத்தேன், இன்று வரை அவர்கள் எங்கே உள்ளார்கள் என்ற விடயம் கூட எனக்குத் தெரியாது.

இவ்வாறு தான் வாழ்ந்து வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் உதவிகள் கூட எனக்கு கிடைப்பதில்லை என குறித்த தாய் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் அதிக வறுமையில் வாடுவதாகவும், தமது நிலையை கருத்திற்கொண்டு தமக்கு உதவி செய்ய நல் உள்ளம் படைத்தவர்கள் முன்வரவேண்டும் என அந்த தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.