வவுனியாவில் வயல் அறுவடை விழா

Report Print Theesan in சமூகம்
63Shares

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் வயல் அறுவடை விழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

உதவி விவசாய பணிப்பாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் குறித்த விழா இடம்பெற்றுள்ளது.

வவுனியா விவசாய திணைக்களத்தின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்பட்ட இயந்திரம் மூலமான விதை நடல், கையினால் விதை நடல் போன்ற முறைகளில் செய்கை பண்ணப்பட்ட மாதிரி நெற்செய்கையின் அறுவடைகள் இதன் போது மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இம்முறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் விளைதிறன், நன்மை, தீமைகள், இலாப, நட்டங்கள் தொடர்பிலும் கண்டறியப்பட்டு அதிகாரிகளினால் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், பண்னை முகாமையாளர் கதீசன், உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.