யாழில் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட யுவதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

யாழில் ஒன்றரை வயது குழந்தையுடன் தனக்கு தானே தீ வைத்து கொழுத்திகொண்டு தற்கொலை முயற்சியில் யுவதி ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தீ வைத்துகொண்டவர் கிளிநொச்சி, விசுவமடுவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரசாந்தன் மேனகா என்ற யுவதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப முரண்பாடு காரணமாகவே இவர் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீக்காயங்களுக்கு இலக்கான யுவதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இரவு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் அவரது உடல் 80% தீக்காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும், இதன் காரணமாக சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், யாழ். வைத்தியசாலையில் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த யுவதி தனது குழந்தையுடன் அடர்ந்த பற்றைக்குள் சென்று இவ்வாறு தீவைத்து கொழுத்திகொண்டுள்ளார்.

இதனையடுத்து, அவர் பற்றைக்குள் செல்வதை அவதானித்த குறித்த பிரதேசவாசிகள் ஓடி சென்று அவரது ஒன்றரை வயதுக் குழந்தையை எந்தபாதிப்புமின்றி மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.