மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் மது அருந்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கடந்த இரு தினங்களாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மதுபானம் அருந்தியவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போதை ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய இரு தினங்களிலும் கண்டி வீதியிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்பாக நின்று மதுபானம் அருந்துபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதை ஒழிப்பு பொலிஸாரின் இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானங்களை வாங்கிச் செல்ல முடியும் எனினும் சிலர் அதனை வாங்கிக் கொண்டு அவ்விடத்திலிருந்து குழுவாக மது அருந்திவருவதுடன் சிலரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

இதனால் அவ் வீதிவழியாகச் செல்பவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.