திருகோணமலையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில், இன்றையதினம் ஹெரோயினுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா, தொனா பகுதியில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுகொண்டிருந்த பெண்ணொருவரும், அதனை வாங்க வந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 - 40இற்கு உட்பட்டவர்கள் என்றும், அதில் ஒருவர் கண்டி, அக்குரனை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers