ஓமந்தையில் கர்ப்பிணித் தாய்மாருக்கு சத்துணவு வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஓமந்தைப் பகுதியிலுள்ள வசதியற்ற 26 கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவுகள் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஓமந்தை ஆரோக்கிய வாழ்வு நிலையத்தில் தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களால் குறித்த உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டிற்கான தமிழ் தெற்கு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பிரதேசத்திலுள்ள வசதியற்ற கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அப்பகுதி குடும்பநல உத்தியோகத்தரினால் தெரிவு செய்யப்பட்ட வசதியற்றவர்களுக்கே இவ்வாறு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஓமந்தை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர், தமிழ் தெற்கு பிரதேச சபை ஓமந்தை வட்டார உறுப்பினர்களான அஞ்சலா கோகிலகுமார், தம்பாப்பிள்ளை சிவராசா ஆகியோர் கலந்துகொண்டு இவற்றை வழங்கி வைத்துள்ளனர்.