கேரளா கஞ்சாவுடன் ஆறு பேர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை கட்டுக்கலை பகுதியில் கேரள கஞ்சா போதைப் பொருள் 10000 மில்லிகிராம் வைத்திருந்த ஆறு பேரை இன்று கைது செய்துள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார்.

நீண்ட காலமாக தோட்டப் பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட கலால் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் ,மீட்கப்பட்ட கஞ்சா போதைப் பொருளும் நாளை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தோட்டப்பகுதிகளுக்கு கஞ்சா விநியோகிப்பவர்களையும் இனங்கண்டு அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.