வெள்ளவத்தையில் சீனர்கள் கசிப்பு விற்பனை

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு வெள்ளவத்தையில் சீனப் பிரஜைகள் நடத்தி வந்த, கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த தாம், இருவரைக் கைது செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சீனப் பிரஜைகளை இலக்கு வைத்து, மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத மது விற்பனை தொடர்பான தகவல் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் இவர்களை கைது செய்தனர்.

இந்த சட்டவிரோத மதுபானத்திற்கு “சீன கசிப்பு” என பெயரிடப்பட்டுள்ளது. 40 லீட்டர் கொள்கலன்களை கொண்ட 40 ஆயிரம் கொள்கலன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சட்டவிரோத வியாபாரத்தை செய்து வந்த சீனப் பெண் மற்றும் ஆணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் மற்றும் களஞ்சியம் வெள்ளவத்தை பகுதியில் இயங்கி வந்துள்ளது.