யாழில் பாடசாலை கட்டிடம் திறந்து வைத்த அமைச்சர் ரவி கருணாநாயக்க

Report Print Sumi in சமூகம்

யாழ். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிக் வகுப்பறை கட்டிடத் தொகுதியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு சென்று கட்டிடத் தொகுதியைத் திறந்து வைத்தார்.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட வலி.வடக்குப் பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.