உலக நீர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வாடிக்கையாளர் தினம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

உலக நீர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் வாடிக்கையாளர் தினம் என்னும் இலகு சேவையினை நீர்ப்பாசன திணைக்களம் வழங்கியுள்ளது.

குறித்த வாடிக்கையாளர் தின நிகழ்வு இன்றும், நாளையும் நீர்ப்பாசன திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெறுகிறது.

2019ஆம் ஆண்டு உலக நீர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இவ் வாடிக்கையாளர் தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளல், முறைப்பாடுகளுக்குரிய தீர்வுகளை விரைவாக பெற்றுக் கொடுத்தல், வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் என்பன தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது.