தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

தம்பலகாமம் - கிண்ணியா பிரதான வீதி கோவிலடி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாகவும், லொறியொன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆணைச்சேனை பகுதியைச் சேர்ந்த எஸ். தேவசாயம் சத்தியசீலன் எனப்படும் 55 வயதுடைய லொறியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் பகுதியிலிருந்து கிண்ணியா ஊடாக மூதூருக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.