பாவனையாளர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு நிகழ்வு

Report Print Theesan in சமூகம்

சர்வதேச பாவனையாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையால் விழிப்புணர்வு நிகழ்வும், பரிசோதனையும் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வர்த்தக நிலையங்களிற்கு சென்ற அதிகாரசபையினர் பொது மக்களோடு கலந்துரையாடியிருந்ததுடன், பாவனையாளரின் உரிமைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாவனையாளர் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நம்பகமான சிமாட் தயாரிப்புகள் எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச பாவனையாளர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எனவே அதனை முன்னிட்டு நாம் நுகர்வோர்களை சந்தித்து அவர்கள் என்ன விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டோம்.

எதிர்வரும் நாட்களிலும் ஒவ்வொரு வீடுகளிற்கு சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களது நுகர்வு கலாசாரம் பற்றியும் அவர்கள் ஏமாற்றப்படுகின்றமை தொடர்பாகவும் ஆராயவுள்ளோம்.

இதனை வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மேற்கொள்ளவுள்ளோம். எனவே பொதுமக்கள் தமது நுகர்வின் போது கூடிய கவனம் எடுக்க வேண்டும் என்பதை நாம் மக்களிற்கு தெரியப்படுத்துகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.