வாழைச்சேனையில் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட அக்பர் பள்ளிவாசல் குறுக்கு வீதியில் கட்டப்படும் கட்டடத்தின் கட்டட வேலையை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் பிரதேசத்தின் 8 பள்ளிவாசல்கள் இணைந்து இன்று குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமான கண்டணப் பேரணியானது ஊர்வலமாக பிரதான சந்தை வீதியின் ஊடாக பிரதேச சபையினை வந்தடைந்துள்ளது.

'தவிசாளரே சட்டவிரோத கட்டடத்தை அகற்று,'ஊரின் ஒற்றுமையை குழப்பாதே,''கலாசார உத்தியோகஸ்தரே எங்கள் ஊரின் ஒற்றுமையை சீர்குலைக்காதே.'என்பன போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்னர் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச சபையின் தலைமை முகாமைத்துவ உத்தியோகஸ்தர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் வழங்கிய பின்னர் கலைந்து சென்றுள்ளனர்.