பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு ஜனநாயக இளைஞர் அமைப்பு ஆதரவு

Report Print Sumi in சமூகம்

இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என பல்கலைக்கழக மாணவர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு ஜனநாயகத்திற்கான இளைஞர் அமைப்பினரும் ஆதரவு தெரிவிப்பதாக அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொது நூலக வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள இந்த தருணத்தில் தமிழ் மக்களின் ஒருமித்த குரல் எனச் சொல்லிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கட்சியினர் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர்.

தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதில் இழுத்தடிப்புச் செய்வதுடன், ஏமாற்றுகின்றார்கள்.

ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என பல்கலைக்கழக மாணவர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.

வெறுமனவே, இது பல்கலைக்கழக மாணவர்களின் கடமையல்ல. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும், இளைஞர்களினதும் கடமையாக இருக்கின்றது.

ஜனநாயகத்திற்கான இளைஞர் அமைப்பினரான நாங்களும் இளைஞர் சேவைகள் மன்றத்தினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களின் பேரணிக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.