பொலிஸ் அதிகாரியின் இடமாற்றத்தை தேசிய ஆணைக்குழு தடுத்தது

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகரின் இடமாற்றத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு இடை நிறுத்தியுள்ளது.

நெவில் டி சில்வா என்ற அதிகாரிக்கு ஏற்கனவே இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு சட்டரீதியற்ற உத்தரவை வழங்கினார் என்றக் குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு இடமாற்றத்துக்கு இடைத்தடையை விதித்துள்ளது.