தமது நாட்டை தனிமைப்படுத்த தாமே அனுசரணை வழங்கும் இலங்கை

Report Print Ajith Ajith in சமூகம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் அல்லது அதன் ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கு அதிகாரம் இல்லை என முன்னாள் வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், மேலும் தெரிவிக்கையில்,

கனடா, ஜேர்மனி, மொன்டினெகிரோ, மெசடோனியா, பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகியவை இலங்கை தொடர்பில் கொண்டு வந்த யோசனையில் இலங்கையும் அனுசரணையாளராக உள்ளது.

இந்நிலையில் தமது நாட்டை தனிமைப்படுத்தும் திட்டத்துக்கு இலங்கையும் அனுசரணை வழங்கியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

இதேவேளை காணி விடுவிப்பு என்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் யோசனையை பொறுத்தவரை, அது ஒரு இறைமையுள்ள நாட்டில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும்.

அதில் ஐக்கிய நாடுகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கப்போவதில்லை.

இதற்கிடையில் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகள் கொண்டு வரும் யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதை விட இலங்கையின் வெளியுறவு அமைச்சு தனித்து யோசனை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று கல்வியியலாளரான சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலேயே வெளிநாடுகளின் யோசனைக்கு இலங்கையின் அனுசரணையை வதிவிடப்பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸீஸ் சமர்ப்பித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.