பம்பலப்பிட்டியில் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்ளும் இளைஞன்

Report Print Vethu Vethu in சமூகம்

பம்பலப்பிட்டியில் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்ட இளைஞன் ஒருவர் தொடர்பில் பேஸ்புக்கில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வாகனத்தில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண்ணிடம், முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞனே இவ்வாறு மோசமாக நடந்து கொண்டுள்ளாரர்.

காலி வீதியின் சமிக்ஞை விளக்கிற்கான வாகனத்தை நிறுத்திய போது, இந்த இளைஞன் தவறான பாலியல் ரீதியான சைககளை காட்டியுள்ளார்.

பின்னர் வாகனம் பயணிக்கும் போது அதனுடனேயே குறித்த இளைஞனும் பயணித்துள்ளார்.

தொடர்ந்து இந்தத் தொல்லையை பொறுத்து கொள்ள முடியாத பெண் சம்பவத்தை காணொளியாக பதிவு செய்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முச்சகர வண்டியில் பெண்கள் செல்லும் வேளையில் ஆபாச செய்கைகளை வெளிப்படுத்துவது மற்றும் தமது ஆடைகளை களைந்து தவறான உறவுக்கு அழைப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Latest Offers