கொழும்பில் மாபெரும் மருத்துவ முகாம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தந்தை செல்வா நற்பணி மன்றமும், கொழும்பு விவேகானந்த சபையும் இணைந்து நடத்தும் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு 14 கலைமகள் வித்தியாலயத்தில் காலை 08.30 மணிமுதல் மதியம் 01.00 மணிவரை, பாடசாலை அதிபரின் தலைமையில் குறித்த மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் கண் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பரிசோதனை செய்தவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கி வைக்கப்படவுள்ளது.

மேலும், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் தொடர்பில் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் குறித்த நிகழ்வின்போது பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers