வவுனியா ஓமந்தையில் 9 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா ஓமந்தை பகுதியில் கேரளா கஞ்சாவுடன் ஜா எல பகுதியினை சேர்ந்த ஒருவரை நேற்று இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் இருந்து 9 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓமந்தை நகர் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தினை வழி மறித்து சோதனையிட்டபோது தனது பயணப்பொதியில் வைத்திருந்த கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் ஜ-எல பகுதியினை சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers