சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற இராணுவ சிப்பாய்க்கு நேர்ந்த கதி!

Report Print Steephen Steephen in சமூகம்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி தவுலகல ஹம்பெக்க பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான டி.எம்.முத்துபண்டா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சிப்பாய் தனது குடும்பத்தினருடன் நேற்று சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்துள்ளார்.

நல்லத்தண்ணி பிரதேசத்தில் இருந்து மலையின் மீது ஏறிக்கொண்டிருந்த போது, இந்திக்கட்டபான பிரதேசத்தில் இன்று அதிகாலை திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தினரும் யாத்திரை சென்ற சிலர் இணைந்து அவரை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த முன்னாள் சிப்பாயின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து நல்லத்தண்ணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers