வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவர்களின் திறனாய்வு

Report Print Theesan in சமூகம்

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி எஸ் ஜெபநாயகி தலைமையில், பாடசாலை மைதானத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கேடையங்களையும் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் வழங்கி வைத்துள்ளனர்.

குறித்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார், வடமாகாண கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சந்திரகுமார், இறம்பைக்குளம் தூய அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி எம்.ஜெயபாலன், பிரதி அதிபர், அயல் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.