மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்ற முப்பெரும் விழா!

Report Print Kumar in சமூகம்

முப்பெரும் அவதார புருஷர்களான பகவான் ஸ்ரீ இராமக்கிருஸ்ணர், அன்னை சாரதா தேவி, வாமி விவேகானந்தர் ஆகியோரின் ஜனனதினத்தினை முன்னிட்டு முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி, பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லம் ஆகியவற்றின் அமைப்பான சமூக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு புதுக்குடியிருப்பு சீமூன் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.

சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் வே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீ மத் சுவாமி தக்ஸஜானந்தஜி மகராஜா கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் அவதார புருஷர்களான பகவான் ஸ்ரீ இராமக்கிருஸ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு ஸ்ரீ மத் சுவாமி தக்ஸஜானந்தஜி மகராஜினால் பூஜைகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது 70க்கும் அதிகமான வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், விசேட தேவையுடைய ஐந்து பேருக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் திலகவதியார் மகளிர் இல்லத்தில் கற்று பல்கலைக்கழகம் சென்றவர்களும் சிறந்த தொழில்வாய்ப்பினை பெற்றவர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை திணைக்கள சிரேஸ்ட நன்னடத்தை அதிகாரி எஸ்.சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Latest Offers