பகிடி வதையினால் பல்கலைக்கழகக் கல்வியை கைவிட்ட 1987 மாணவர்கள்

Report Print Ajith Ajith in சமூகம்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை காரணமாக இதுவரை 1987பேர் தமது கல்வியை கைவிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் பகிடிவதையை முழுமையாக ஒழிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

எனினும் அது தொடர்வதாக அமைச்சர் குறிப்பிட்டார். பகிடிவதையை தடுக்க உபவேந்தர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்ய அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Latest Offers