தகவலறியும் சட்ட மூலம் தொடர்பில் எழுந்த சந்தேகங்களுக்கு தெளிவூட்டல்!

Report Print Kumar in சமூகம்

கிராமத்திற்கு தகவல் உரிமை எனும் தலைப்பிலான தகவலறியும் சட்டமூலம் தொடர்பிலான நடமாடும் சேவை ஒன்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு வலையமைப்பும் இணைந்த ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ரமணி குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் எஸ்.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கிராம மட்டத்தில் தெளிவுபடுத்தல்களை ஏற்படுத்தி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்கவும் கிராம மட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான கருத்துப்பகிர்வுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

தகவலறியும் சட்ட மூலம்தொடர்பில் பொது மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு எழுந்த சந்தேகங்கள் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப்கறியல் இளையோர் அமைப்பின் பணிப்பாளர் ரவீந்திர டீ சில்வா, தகவலறியும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் பியதிஸ்ஸ ரணசிங்க, யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கும் பிதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட உதவிப் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers