வவுனியா ஆதரவற்ற சிறுவர்களிற்கான இல்லம் திறந்து வைப்பு!

Report Print Theesan in சமூகம்

வவுனியா - அரபா நகரில் ஆதரவற்ற இஸ்லாமிய சிறுவர்களுக்கான சிறுவர் இல்லம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடர்பாடுகளுடன் செயற்பட்டு வந்த குறித்த சிறுவர் இல்லம் தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் ஏழு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு மௌலவி கே.எம். அஜாத் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், வாமி நிறுவனத்தின் சவுதி தலைமையகத்தின் உத்தியோகத்தர்கள், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், நகரசபை உறுப்பினர் பாரி, வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் நஜிமான் சாகீப், ஐஎஸ் ஆர்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஜனாப் மிகிலார் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers